ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

Tech Skills Demand | ஹை-லெவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வேலைகளை ஏற்க மறுப்பு!

Tech Skills Demand | ஹை-லெவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வேலைகளை ஏற்க மறுப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Tech Skills Demand | அதிக டிமாண்ட் இருக்கும் இந்த டெக் பணியிடங்களுக்கு தற்போதைய சம்பளத்தை விட 100 மடங்கு அதிக சம்பள பேக்கேஜ் வழங்கப்படுகிறது என்ற தரவும் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடந்த சில ஆண்டுகளாக தொடங்கப்பட்ட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்ற செய்தி பரவும் அதே நேரத்தில், தொழில்நுட்ப ரீதியாக அதிக திறன் கொண்ட ஊழியர்கள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாற முயற்சித்து, வேலை கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ளும் சதவிகிதம் குறைந்து வருகிறது. ஃபுல்-ஸ்டாக் என்ஜினியர், டேட்டா என்ஜினியர்கள், ஃப்ரன்ட்-எண்டு என்ஜினியர் மற்றும் டெவலப்பர்கள், டேட்டா ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஹை-எண்டு ஸ்கில் கொண்ட ஊழியர்களில், இரண்டில் ஒருவர் தான் பணி நியமன ஆணையை ஏற்றுக்கொள்கிறார்கள். அதாவது, வேலை கிடைத்தும் அதை ஏற்றுக்கொள்ளாத நிலை தற்போது அதிகரித்து வருகிறது என்று வேலைவாய்ப்பு கன்சல்டன்சி கூறி வருகிறது.

குறிப்பாக ஹை லெவல் மென்பொருள் அப்ளிகேஷனை உருவாக்கும் ஸ்டாக் என்ஜினியர்களில் பலரும் புதிய வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விரும்பும் நிறுவனத்தில் விரும்பும் பணியில் சேர முடியாதா, சரியான வேலை கிடைக்காதா என்ற நிலைமாறி அத்தகைய வேலை கிடைத்தும் அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். மார்ச் 31, 2021 நிதியாண்டில், 73% தொழில்நுட்ப துறை ஊழியர்கள் வேலையை ஏற்றுக்கொண்டனர். அது கடந்த நிதியாண்டில், அதாவது மார்ச் 31, 2022 இல், 53 சதவிகிதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டில் முதல் மூன்று மாதங்களுக்குள்ளாகவே 50 சதவிகிதமாக மாறியுள்ளது. மேலும், மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பணிகளுக்கும் வேலை வாய்ப்பை ஏற்றுக் கொள்வது 80 சதவிகிதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைந்துள்ளது. Xpheno வின் இணை நிறுவனரான அணில் எதனுர் கூறுகையில், ‘திறமைசாலியான ஊழியர்களை நோக்கி நிறுவனங்கள் படையெடுத்து, அவர்கள் அந்த வேலையை ஏற்றுக்கொள்ளும் சதவிகிதம் கோவிட் தொற்றுக்கு முன்பு இருந்ததைவிட இப்பொழுது வெகுவாக குறைந்துள்ளது. மீண்டும் அந்த நிலையை எட்டுவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும்’ என்று கூறினார்.

தொழில்நுட்பத்தில் அதிக மற்றும் சிறப்புத் திறன்களை கொண்ட ஊழியர்கள். எந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். இதனால், நிறுவனத்தால் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. 100 ஆஃபர்கள் வழங்கினால் அதில் 60 ஆஃபர்கள் தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதிலும் 35 நபர்கள் தான் பணியில் சேர்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு துறையில் ஸ்பெஷலைஸ் செய்திருக்கும் டெக் ஊழியர்களின் டிமாண்ட் அதிகமாக இருப்பதால், திறமை வாய்ந்த ஊழியர்கள் தங்களின் டிமாண்டுகளை நிறைவேற்றும் நிறுவனங்களை தான் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதிக டிமாண்ட் இருக்கும் இந்த டெக் பணியிடங்களுக்கு தற்போதைய சம்பளத்தை விட 100 மடங்கு அதிக சம்பள பேக்கேஜ் வழங்கப்படுகிறது என்ற தரவும் வெளியாகியுள்ளது. உதாரணமாக 4 – 7 வருட அனுபவம் இருக்கும் ஒரு புல் ஸ்டாக் என்ஜினியர் தன் நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது 70 – 120 சதவிகிதம் சம்பள உயர்வு அதிகமாக கேட்கலாம். இதே ரோலுக்கு கடந்த ஆண்டு அதிகபட்சமாக 35 சதவிகிதம்தான் கோர முடிந்தது.

Also Read : குட்நியூஸ்! மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி உத்தரவு

பொதுவாக பயன்படுத்தப்படும் மென்பொருள் அல்லாத ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப திறன்களுக்கான, அதில் சிறப்பு தேர்ச்சி பெற்ற நபர்களின் தேவை அதிகமாகவும், அதை நிறைவேற்றும் அளவுக்கு நபர்கள் குறைவாக இருப்பதால், இனிவரும் காலங்களில் எந்த ரோல் அல்லது டெஸ்டினேஷன்க்கு வேலை என்பதைக் கடந்து திறன்கள் அடிப்படையிலான வேலை தான் வழங்கப்படும்.

First published:

Tags: Employment, Job