முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம்.. 20,000 காலிபணியிடங்கள்... எஸ்.எஸ்.சி தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம்.. 20,000 காலிபணியிடங்கள்... எஸ்.எஸ்.சி தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

வேலைவாய்ப்பு தகவல்

வேலைவாய்ப்பு தகவல்

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எஸ்.எஸ்.சி தேர்வில் Group B மற்றும் Cக்கான பல்வேறு அமைச்சகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப இந்த டிசம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் : பதவிக்கு ஏற்றார் போல - 25,500 முதல் 1,51,100 வரை.

காலியிடங்கள் : சுமார் 20,000 இடங்கள்

வயது வரம்பு : 18 - 32

கல்வித்தகுதி : குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிக்க :  8ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்.. ஊராட்சி ஓன்றியத்தில் வேலைவாய்ப்பு

01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலுன் தகவலுக்கு :

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf

First published:

Tags: Competitive Exams, Job vacancies, SSC