ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC Group 4 : குரூப் 4 தேர்வுக்கு 17.83 லட்சம் பேர் விண்ணப்பம்: இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம்

TNPSC Group 4 : குரூப் 4 தேர்வுக்கு 17.83 லட்சம் பேர் விண்ணப்பம்: இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

TNPSC Group 4 : டி.என்.பிஸ்.சி தேர்வுக்கு தகவல். இணையவழி மூலம் இன்று இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். பின்னர், அச்சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

Combined Civil Services Examination-IV :  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  குரூப் 4 எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே  கடைசி தேதியாகும்.  (28.04.2022.) விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in or www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 7,301

மார்ச் 30ம் தேதி முதல் நேற்று மாலை வரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என டி.என்.பிஸ்.சி தகவல். இணையவழி மூலம் இன்று இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். பின்னர், அச்சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும்.

TNPSC Group 4 தேர்வுக்கு அப்ளை செய்ய போறீங்களா... இதை மறக்க வேண்டாம்

விண்ணப்பதாரர் தங்களுடைய ஒருமுறைப் பதிவுடன் (நிரந்தரப்  பதிவு) ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். விண்ணப்பபதாரரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, இடைநிலை கல்விச் சான்று எண் மற்றும் குழுமம்,நிரந்தர முகவரி, தொடர்பு முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற விவரங்களை நிரந்தரப் பதிவில் சமர்பிக்க வேண்டும். இந்த தகவல்கள், தாமாகவே விண்ணப்பதாரரின் குரூப் 4 விண்ணப்பத்தில் முன்கொணரப்படும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள்  எவற்றையேனும் திருத்தம்/ மாற்றம் செய்ய விரும்பினால், அவற்றை முதலில் நிரந்தரப் பதிவில் திருத்தம் செய்யவும். அதன்பிறகு,  குரூப் 4 தேர்வு விண்ணப்பித்தல் உறுதி செய்யவும். இதர விபரங்களை (உதாரணமாக, தந்தையின் மாவட்டம்) நேரடியாக குரூப் 4 விண்ணப்பத்திலேயே திருத்தம் செய்யலாம்.

TNPSC Current Affairs 3: பொது அறிவுப் பிரிவில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவு கட்டணம் : ரூ.150

தேர்வுக்கு கட்டணம் : ரூ.100

நிரந்தரப் பதிவினை செய்து, ஐந்து ஆண்டுகள் முற்றுபெறாத விண்ணப்பத்தாரர்கள் பதிவுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து  விலக்களிக்கப்படுவார்கள். அதேபோன்று, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

முக்கியமான நாட்கள்:

எழுத்துத் தேர்வுஜுலை 24
எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடுஅக்டோபர் , 2022
சான்றிதழ் பதிவேற்றம்அக்டோபர் , 2022
சான்றிதழ் சரிபார்ப்புநவம்பர் , 2022
கலந்தாய்வுநவம்பர் , 2022

எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

ஒவ்வொரு வகுப்புப் பிரிவுகளிலும் (ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர், பொதுப் பிரிவினர்) நியமனம் செய்யப்படவுள்ள எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விண்ணப்பித்தார்கள் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, எழுத்துத் தேர்வில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

தேர்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம்.

ஒரு முறைப் பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதர சந்தேகங்களை grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

Published by:Salanraj R
First published:

Tags: Government jobs, Group 4, TNPSC