ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNUSRB SI 2022 தேர்வு எழுதியவர்களின் கவனத்துக்கு - வெளியானது முக்கிய அப்டேட்!

TNUSRB SI 2022 தேர்வு எழுதியவர்களின் கவனத்துக்கு - வெளியானது முக்கிய அப்டேட்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

TNUSRB SI 2022 Result : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் SI தேர்வுக்கான இறுதி தற்காலிக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) Sub-Inspectors of Police (Taluk & AR) 2022 தேர்வின் தற்காலிகமாகத் தேர்வானவர்களின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆனது கடந்த ஜூன் மாதத்தில் Sub-Inspectors of Police பதவிக்கான காலிப்பணிக்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு, pet, viva, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போது அதில் மருத்துவ பரிசோதனைக்கான அழைப்பு விடுத்து முடிவுகள் வெளிவந்துள்ளன.

  முடிவுகள்:

  தற்போது வெளியிடப்பட்ட முடிவுகளை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  படி -1 : https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.

  படி -2 : இடது புறத்தில் Direct Recruitment of Sub-Inspectors of Police (Taluk & AR) - 2022 என்ற தலைப்பில் இறுதியில் முடிவுகளைக் காண லிங்க் உள்ளது.

  படி -3 : அதில் Enrolment No. wise மற்றும் Roster wise என்று இரண்டு வகையில் தேர்வு செய்யப்பட்டவர்களில் பட்டியல் உள்ளது.

  இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். அதன் பின்னர் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

  TNUSRB SI முடிவுகளைக் காண :

  Final Provisional Selection List(Enrolment No. wise)

  Open candidates

  department candidates

  Final Provisional Selection List (Roster wise)

  open candidates

  department candidates

  Published by:Janvi
  First published:

  Tags: Exam results, Tamil Nadu Government Jobs