Common Recruitment of Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen CR: 2022-ம் வருட இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் விண்ணப்ப செயல்முறை குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஜூலை 7 முதல் விண்ணப்பம் தொடங்கும். இணைய வழியில் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 3552
கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று, 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:
பிரிவு | உச்ச வயது வரம்பு |
---|---|
பொதுப் பிரிவு | 26 வயது |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் | 28 வயது |
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் | 31 வயது |
திருநங்கைகள் | 31 வயது |
ஆதரவற்ற விதவைகள் | 37 வயது |
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள் | 47 வயது |
2022 அரசு விதிமுறைகளின் படி, இந்த எழுத்துத் தேர்வில் முதன் முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.
தேர்வுக் கட்டணம்: ரூ 250/-
விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம். தேர்வு கட்டணத்தை மேலே குறிப்பிடாத வேறுவழிகளில் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேல் விவரங்கள் / சந்தேகங்களுக்கு, மாநிலத்தின் அனைத்து மாநகரம் மற்றும் மாவட்ட காவல் அலுவலங்களில் உதவி மையம் அமைக்கப்படும். அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு வாரியத்தின் உதவி மையத்தை அணுகலாம். 044-40016200,044-28413658,9499008445,9176243899, 9789035725 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs, TN Police