தமிழகக் காவல்துறையில் இரண்டாம் நிலை பிரிவில் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு உள்ள 3,552 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 30.06.2022 ஆம் நாள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, 15.08.2022 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணிகளுக்கான தேர்வு கடந்த நவம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. தற்போது தேர்வு எழுதியவர்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கான காலிப்பணியிடங்களில் ஆண்களுக்கு 2,890 பணியிடங்கள் மற்றும் பெண்களுக்கு 662 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டது.
இதில் சிறப்பு ஒதுக்கீடுகள் படி விளையாட்டு பிரிவில் 10%, முன்னாள் இராணுவத்தினர் பிரிவில் 5% மற்றும் ஆதரவற்ற விதவைகள் பிரிவில் 3% ஒதுக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தற்போது இப்பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகளைத் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 5 க்கு 1 என்ற கணக்கில் அடுத்தகட்ட உடற்கல்வி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு முடிவுகளை காண :
CV-PMT-ET-PET தேர்விற்க்கு தகுதியானவர்கள் (சேர்க்கை எண் வரிசை)
CV-PMT-ET-PET தேர்விற்க்கு தகுதியானவர்கள்
(பட்டியல் வரிசை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Exam results, Tamilnadu police