Home /News /employment /

3552 காவலர் காலிப் பணியிடங்கள்... தேர்வு முறை என்ன?

3552 காவலர் காலிப் பணியிடங்கள்... தேர்வு முறை என்ன?

 2-ம் நிலை காவலர் பதவி

2-ம் நிலை காவலர் பதவி

ஆண் விண்ணப்பதாரர்கள் கயிறு ஏறுதல் நிகழ்வில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்நிகழ்வில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தமிழ்நாடு காவல்துறை, சிறைத் துறை மற்றும் மீட்புப்பணித் துறைகளில் காலியாக உள்ள 3552 காலிப் பணியிடங்களுக்கான இணையவழி விண்ணப்ப செயல்முறை வரும் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இதற்கான தெரிவு 3 நிலைகளில் நடைபெறும்.  முதன்மை எழுத்துத் தேர்வு, உடல்திறன் போட்டிகள்,  சிறப்பு மதிப்பெண்கள்  ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிபப்டையில் இறுதி ஆட்சேர்ப்பு பட்டியல் தயாரிக்கப்படும்.

    எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடத்தப்படும். முதல் பகுதி, தமிழ் மொழி தகுதி தேர்வாகவும், இரண்டாவது பகுதி முதன்மை எழுத்துத் தேர்வாகவும் நடைபெறும். தமிழ் மொழி தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது. முதன்மை எழுத்துத் தேர்வில் பொது அறிவு (45 மதிப்பெண்கள்) மற்றும் உளவியல் (25 மதிப்பெண்கள்) சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். 70 மதிப்பெண்களுக்கான இத்தேர்வின் நேரம் 1 மணி நேரம் 20 நிமிடங்களாகும்.

    இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அடுத்ததாக உடற்தகுதி தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் வெறும் தகுதித் தேர்வென்பதால், இதற்கு எந்த மதிப்பெண்களும் கிடையாது.

    உடற்கூறு அளத்தலில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு அளத்தல் நடைபெறும் , பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உயரம் அளத்தல் மட்டுமே நடைபெறும்.

    உடற்தகுதித் தேர்வில் தகுதி பெற்றவர்கள், அடுத்தக் கட்ட தேர்வான உடல்திறன் போட்டிக்கு அழைக்கப்படுவார்கள்.

    உடல்திறன் போட்டி: 

    ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு நிகழ்விலும், ஒரு நட்சத்திரம் பெற்றால், 4 மதிப்பெண்களும், இரண்டு நட்சத்திரங்கள் பெற்றால் 8 மதிப்பெண்களும் பெறலாம் விண்ணப்பதாரர் ஒரு நட்சத்திரம் பெறவில்லை என்றாலும் கூட அவர்களுக்கு (பூஜ்யம்) மதிபெண் வழங்கப்படும் மேலும் அவர்கள் அடுத்த உடல் திறன் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    விண்ணப்பதாரர்கள் மூன்று நிகழ்வுகளிலும், அதிகபட்சம் 6 நட்சத்திரங்கள் 24 மதிப்பெண்கள் பெறலாம்.

    அ) ஆண்கள்:










































    வ. எண்நிகழ்வுகள்ஒரு நட்சத்திரம் (4 மதிப்பெண்கள் )இரு நட்சத்திரங்கள் (8 மதிப்பெண்கள்)
    1கயிறு ஏறுதல்5.0 மீட்டர்6.0 மீட்டர்
    2நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல்நீளம் தாண்டுதல்3.80 மீட்டர்4.50 மீட்டர்
    உயரம் தாண்டுதல்1.20 மீட்டர்1.40 மீட்டர்
    3ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர்100 மீட்டர்15.00 வினாடிகள்13.50 வினாடிகள்
    400 மீட்டர்80.00 வினாடிகள்70.00 வினாடிகள்

    ஆண் விண்ணப்பதாரர்கள் கயிறு ஏறுதல் நிகழ்வில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். இந்நிகழ்வில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்.

    நீளம் தாண்டுதல் (அல்லது) உயரம் தாண்டுதல் நிகழ்வில் விண்ணப்பதாரர்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

    100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் ஆகிய நிகழ்வுகளில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

    ஆ) பெண்கள் மற்றும் திருநங்கைகள்:










































    வ. எண்நிகழ்வுகள்ஒரு நட்சத்திரம் (4 மதிப்பெண்கள்)இரு நட்சத்திரங்கள் (8 மதிப்பெண்கள்)
    1நீளம் தாண்டுதல்3.0 மீட்டர்3.75 மீட்டர்
    2குண்டு எறிதல் (அல்லது) கிரிக்கெட் பந்து எறிதல்குண்டு எறிதல் (4 Kg)4.25 மீட்டர்5.50 மீட்டர்
    கிரிக்கெட் பந்து எறிதல்17 மீட்டர்24 மீட்டர்
    3ஓட்டம் 100 மீட்டர் (அல்லது) 200 மீட்டர்100 மீட்டர்17.50 வினாடிகள்15.50 வினாடிகள்
    200 மீட்டர்38.00 வினாடிகள்33.00 வினாடிகள்

    i) நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் / கிரிக்கெட் பந்து எறிதல் நிகழ்வில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் எந்த வாய்ப்பில் அளவு அதிகமானதோ அந்த அளவு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.
    ii) 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஓட்டம் நிகழ்வில் ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும்.

    சிறப்பு மதிப்பெண்கள்:

    விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் உயர்அளவாக 6  மதிப்பெண்கள் வழங்கப்படும்.

    தேசிய மாணவர் படை (NCC) சாண்றிதழ் (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்), நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) , விளையாட்டு சாண்றிதழ் (அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்) வழங்கப்படும்.

    எனவே, மேற்படி தகவல்களை கவனமுடன் வாசித்து தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    மேற்படி தகவல்கள் அனைத்தும், இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுளளது.


    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs, Police

    அடுத்த செய்தி