Home /News /employment /

TNUSRB Common Recruitment: 3552 காவலர் பணியிடங்கள்: இன்றே விண்ணப்பியுங்கள்

TNUSRB Common Recruitment: 3552 காவலர் பணியிடங்கள்: இன்றே விண்ணப்பியுங்கள்

காட்சி படம்

காட்சி படம்

மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்

    இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன், தீயணைப்பு வீரர் ஆகிய  காலிப் பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு (Common Recruitment) விண்ணப்ப செயமுறை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.

    ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு  விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மொத்த காலியிடங்கள்: 3552

    மொத்த காலிப்பணியிடங்களில் 10% விளையாட்டிற்கான இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் என்றும், பெண்களுக்குரிய பணியிடங்களில் 3% ஆதரவற்ற விதவைகளுக்கு (Destitute Widow) ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த  ஆட்சேர்ப்பில்  துணை ராணுவப்படை வீரர்களுக்கு அளித்து வந்த சிறப்பு ஒதுக்கீட்டை தமிழக அரசு நீக்கியுள்ளது.

    கல்வி தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று, 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:































    பிரிவுஉச்ச வயது வரம்பு
    பொதுப் பிரிவு26 வயது
    பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர்28 வயது
    ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர்31 வயது
    திருநங்கைகள்31 வயது
    ஆதரவற்ற விதவைகள்37 வயது
    முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ வீரர்கள்47 வயது

    2022 அரசு விதிமுறைகளின் படி, இந்த எழுத்துத் தேர்வில் முதன் முறையாக தமிழ் மொழி தகுதித்தேர்வு நடத்தப்படும். இதில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

    தெரிவு செய்யப்படும் முறை: 
    மதிப்பெண்கள் ஒதுக்கீடு :































    நிலைகள்மதிப்பெண்கள்
    1முதன்மை எழுத்துத் தேர்வு70 மதிப்பெண்கள்
    2உடல்திறன் போட்டிகள்24 மதிப்பெண்கள்
    3சிறப்பு மதிப்பெண்கள் (NCC,NSS,விளையாட்டு வீரர்)6 மதிப்பெண்கள்
    மொத்தம்100 மதிப்பெண்கள்


     

    தேர்வுக் கட்டணம்: ரூ 250/-

    விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம்.

    மேல் விவரங்கள் / சந்தேகங்களுக்கு, மாநிலத்தின் அனைத்து மாநகரம் மற்றும் மாவட்ட காவல் அலுவலங்களில் உதவி மையம் அமைக்கப்படும். அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு வாரியத்தின் உதவி மையத்தை அணுகலாம். 044-40016200,044-28413658,9499008445,9176243899, 9789035725 தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Recruitment

    அடுத்த செய்தி