ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNUSRB 2022 Answer Key | இரண்டாம் நிலைக் காவலர் பணி எழுத்துத் தேர்வுக்கான பதில்கள் வெளியீடு..!

TNUSRB 2022 Answer Key | இரண்டாம் நிலைக் காவலர் பணி எழுத்துத் தேர்வுக்கான பதில்கள் வெளியீடு..!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

Tamil Nadu Uniformed Services Recruitment Board : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர் பணிக்கான எழுத்து தேர்வின் விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இரண்டாம் நிலைக் காவலர்(ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) பிரிவில் இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 2022 ஆம் ஆண்டு நேரடிக்கு முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தற்போது அதற்கான விடை குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு ஜீன் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து. இப்பணிகளுக்கு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

தற்போது அந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் இந்த விடைக்குறிப்பை பயன்படுத்திக் கொண்டு தேர்வில் தாங்கள் எப்படிச் செயல்பட்டனர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் விடைக்குறிப்பு மற்றும் வினாக்களில் ஏதேனும் தவறு கண்டறிந்தால் அதனைத் தேர்வர்கள் டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read : இந்தியன் ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

தவறுகள் இருந்தால் தகுந்த ஆதாரங்கள் மற்றும் சான்றுகளுடன் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்திற்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு விடைக்குறிப்பை காண : https://www.tnusrb.tn.gov.in/pdfs

First published:

Tags: Tamil Nadu Government Jobs, Tamilnadu police