தமிழக அரசு போக்குவரத்து கழக வேலைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
தமிழக அரசு போக்குவரத்து கழக வேலைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
தமிழக அரசு போக்குவரத்து
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். 31.10. 2021 வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கான அறிவிப்பு கடந்த மாதம் 15.09.2021ம் தேதி வெளியானது. வேலைக்கு விண்ணப்பிக்க 16.10.2021ம் தேதி கடைசி தேதி என முன்னதாக அறிவிப்பு வெளியானது. தற்போது 31.10.2021 விண்ணப்பிக்க கடைசி தேதி என அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
Tamil Nadu State Transport Corporation Ltd (TNSTC)
தமிழ்நாடு (Coimbatore, Kumbakonam, Villupuram, Tirunelveli and Nagercoil)
தேர்ந்தெடுக்கும் முறை
மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிப்போர் முதலில் Shortlist செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபாரப்பு (Certificate Verification) மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
15.09.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
31.10.2021 ( விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.)
கல்வி தகுதி
வேலையின் பெயர்
கல்வி தகுதி
Graduate Apprentice
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology பாடங்களில் முதல் வகுப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Technician Apprentice
Engineering or Technology பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள முறையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்
Graduate Apprentice
ரூ.4984/-
Technician Apprentice
ரூ.3582/-
விண்ணப்ப முறை
online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
TAMILNADU STATE TRANSPORT CORPORATION LTD (TNSTC) – REGIONS: Coimbatore, Kumbakonam, Villupuram, Tirunelveli and Nagercoil – Notification என்ற விளம்பரத்தைக் கிளிக் செய்யவும்.
அறிவிப்பினை நன்றாக படித்த பின்னர் அனைத்தையும் சரி பார்க்கவும்.
பின்னர் apply link, click on the link என்பதற்கு க்ளிக் செய்யவும்.
உங்கள் விவரங்களை சரியாக நிரப்பவும்.
இறுதியாக click submit button க்ளிக் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.