கொரோனா தாக்கம் குறையும்வரை டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடக்காது என அறிவிப்பு

Youtube Video

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தற்போது நடைபெறாது என்றும் சூழலை பொறுத்து காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நிச்சயம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  குரூப் 1, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுமா என்று தேர்வர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த குரூப் 1 தேர்வு, குரூப் 2 தேர்வு, குரூப் 2ஏ தேர்வு, குரூப் 4 தேர்வு ஆகியவை கொரோனா தாக்கம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், சூழல் சரியானவுடன் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்றும், நந்தகுமார் தெரிவித்தார். இதனால் தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று  நந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

  மேலும், தேர்வு நடப்பதற்கு முன்பாக  3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையேயும் போதிய கால இடைவெளி வழங்கப்படும் என்றும் நந்தகுமார் உறுதியளித்துள்ளார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Published by:Vijay R
  First published: