ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC UPSC Current Affairs 1: போட்டித் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ!

TNPSC UPSC Current Affairs 1: போட்டித் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ!

மாதிரி படம்

மாதிரி படம்

TNPSC UPSC Exam Preparation Current Affairs: பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின் கீழ், அதிகமான உணவு தானியங்களை மத்திய/மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டியிருந்தது

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

Govt Exam Preparation Daily Current Affairs : வரும் 2023 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 (TNPSC Group 1) முதன்மைத் தேர்வு, குரூப் 2 முதன்மைத் தேர்வு, யுபிஎஸ்சி உள்ளிட்ட  பல்வேறு போட்டித் தேர்வு நடைபெற இருக்கிறது. எனவே, அரசு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவும் நோக்கில் நியூஸ்18 தமிழ்நாடு இணையதளம் பாடத் திட்டங்கள் (Exam Wise Syllabus), முந்தைய ஆண்டு வினாத்தாட்கள், முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) வழங்க இருக்கிறது. எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் இதன்கீழ் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கிய நிகழ்வுகள்: கொரோனா நோய்த் தொற்று பொது முடக்கத்தில் கொண்டு வரப்பட்ட பிரதமரின் ஏழை மக்களுக்கான இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) இம்மாதத்துடன் நிறைவடையும் உள்ள நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், 80 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் பலனடைய உள்ளனர்.

பின்னணி : தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ல் இயற்றப்பட்டது. இந்த சட்டம், நாட்டில் உள்ள 50% நகர்ப்புற முன்னுரிமைக்  குடும்பங்களும், 75% கிராமப்புற முன்னுரிமைக்  குடும்பங்களும் பொது விநியோக முறை மூலம் உணவினைப் பெற உரிமையை அளிக்கிறது.

இந்த சட்டத்தின் கீழ், நியாய விலைக் கடைகளின் மூலம் தானியம்/கோதுமை/அரிசி ஆகியவை கிலோ ஒன்றுக்கு ரூ. 1/2/3 என்னும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட, 80 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்தின் போது, பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்  கீழ், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களுடன் கூடுதலாக நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்பட்டது. அதாவது, கிட்டத்தட்ட 10 கிலோ உணவு தானியம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. ( ஒவ்வொரு மாதத்திற்கும் கிட்டத்தட்ட 100 மில்லியன் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டன)

இந்த திட்டத்தின் மூலம், ஏழைகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றினால் நலிவடைந்தோர் பயன்பெற்று வந்தனர். மேலும், இந்த திட்டம் மிகப் பெரிய அரசியல் ஆதாயத்தையும் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு அளித்தது. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத்  தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கித் தந்தது. இந்நிலையில், இந்த திட்டத்தை  நீட்டிக்கப்படவில்லை  தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காரணங்கள் என்ன ? 

1. பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தின் கீழ், அதிகமான உணவு தானியங்களை மத்திய/மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டியிருந்தது.

2.  ரூ. 1/2/3 என்னும் மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த உணவு தானியங்கள் தற்போது இலவசமாக வழங்கப்பட உள்ளன. எனவே, அரசு செலவீனங்கள் மிகவும் அதிகரிக்காது என்று கூறப்படுகிறது.

கவனிக்க வேண்டியவை என்ன ?  

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னுரிமைக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.

தேசிய உணவு பாதுக்காப்பு சட்டத்தின் கீழ் விடுபட்டுள்ள பயனாளிகள் மதிப்பீடு... நன்றி- Scroll.in

2011ல் நாட்டின் மக்கள்தொகை 1.22 பில்லியன் ஆகும். இதில், 814 மில்லியன் பேர் உணவு பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் உணவு உரிமையைப் பெருகின்ற்ன. 2021ல் நாட்டின் மக்கள் தொகை 1.37 பில்லியன் என்று மதிப்படப்படுகிறது. எனவே, 922 மில்லியன் பேர் இத்திட்டத்தின் கீழ் உணவு உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.  எனவே, தோராயமாக  10 கோடி தகுதியான நபர்கள் உணவு பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் எந்தவித உரிமையும் பெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தமிழ்நாடு போல் உலகாளவிய பொது விநியோக வழங்கல் முறையை (அனைத்து அட்டதாரர்களுக்கும் இலவசமாக அரிசி) பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து  வருகின்றனர்.

First published:

Tags: Group 1, TNPSC, UPSC