Home /News /employment /

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியானது; தேர்வர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியானது; தேர்வர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

குரூப் 2/2ஏ எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி தனது இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளது.

குரூப் 2/2ஏ எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2/2A பதவிகளுக்கான  முதல்நிலை எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் நடத்தியது. 11 ,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.



இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி தனது இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த, உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம்.

ஜூன் 3ம் தேதி மாலை 5.45 மணிக்குள்  தேர்வாணைய இணையதளத்தில் உள்ள 'Answer Key Challenge' என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும். அதன்பின், இச்சேவை  முற்றிலும் நிறுத்தப்படும். ஒருவர் எத்தனை கேள்விகளையும் மறுக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.    இருப்பினும், தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வசதியை கோர முடியும்.

சரியான விடையைக் கோர விரும்பும் விண்ணப்பதாரர்,  டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் தனது பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வு பாடத்தின் பெயர், வினா எண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

TNPSC Current Affairs 10: குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவு தலைப்புகள் இங்கே

மேலும், உத்தேச விடைகளை மறுத்து தாங்கள் சுட்டிக் காட்டும் சரியான விடைக்கான/விடைகளுக்கான ஆதாரமாக இருக்கும் புத்தகத்தின் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து கோரிக்கைகளும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெறப்படும் என்றும் அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெரளிவுபடுத்தியுள்ளது. 

TNPSC Current Affairs 11: டிஎன்பிஎஸ்சி தேர்வு ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள் இங்கே

அடுத்து என்ன செய்யலாம்: 

இருக்கும் ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் முதல்நிலைத் தேர்வில் 130 கேள்விகளுக்கு மேல் சரியான  விடையளித்திருந்தால் முதன்மை தேர்வுக்கு தகுதி பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 140க்கு மேற்பட்ட சரியான கேள்விகள் எடுத்த    பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏணைய பிரிவினர் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டஉத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொண்டு உடனடியாக முதன்மைத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.


முக்கியமான நாட்கள்:   
























முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடுஜூன் 2022
முதன்மை எழுத்துத் தேர்வுசெப்டமபர் 2022
முதன்மை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடுடிசம்பர் 2022
சான்றிதழ் சரிபார்ப்புஜனவரி 2023
நேர்முகத் தேர்வுகலந்தாய்வுபிப்ரவரி 2023


தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின்னர், தேர்வர்களின் OMR விடைத்தாள் மற்றும் முதன்மைத் தேர்வு விடைத்தாள் ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். உரிய கட்டணம் செலுத்தி தேர்வர்கள் தங்களது விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Published by:Salanraj R
First published:

Tags: TNPSC

அடுத்த செய்தி