10.03.2023 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது.
தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவியில் உள்ள 5 காலிப்பணியிடங்களுக்கு 11/11/2022 ஆம் நாள் அறிவிப்பு வெளியானது. அதனைத்தொடர்ந்து, டிசம்பர் 10 ஆம் நாள் வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.
தற்போடு இப்பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Government Jobs, TNPSC