குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி இருநிலைகளாக நடத்தப்படும் - டிஎன்பிஎஸ்சி அதிரடி

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் இனி இருநிலைகளாக நடத்தப்படும் - டிஎன்பிஎஸ்சி அதிரடி
(கோப்பு படம்)
  • News18
  • Last Updated: February 15, 2020, 10:33 AM IST
  • Share this:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தனது தேர்வு முறைகளில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்று வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், தேர்வு முறைகளில் மாற்றங்களை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த வாரம் ஆதார் கட்டாயம் உள்ளிட்ட ஆறு முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், இன்று மேலும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன்படி,
1. குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகளுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டுமே இதுவரை நடந்துவந்தது. இனி, இந்த தேர்வுகள் முதனிலை மற்றும் முதன்மை தேர்வுகளாக நடத்தப்படும்.2. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை மூன்று மணி நேரம் நடக்கும். தேர்வர்கள் 9 மணிக்கே தேர்வறைக்கு வர வேண்டும். 10 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

3. அனைத்து வினாக்களுக்கும் விடைகள் அளிப்பது கட்டாயமாகும். ஏதேனும் ஒரு வினாவுக்கு பதில் அளிக்கவில்லை என்றால் விடைத்தாள் செல்லாததாக்கப்படும்.

4. விடைத்தாளில் தேர்வரின் கையெழுத்துக்கு பதில் கைரேகை பதிவு செய்யப்படும்

இதையும் படிங்க: இனி ஆதார் இருந்தால் தான் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத முடியும்... தமிழக அரசு அதிரடி!
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்