நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 1089
பதவியின் பெயர் | பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீடு | காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
நில அளவர் | நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணி | 794 +4 (முன் கொணரப்பட்ட காலிப் பணியிடங்கள் ) | ரூ.19500-71900/ |
வரைவாளர் | நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணி | 236 | ரூ.19500-71900/ |
அளவர்/ உதவி வரைவாளர் | தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணி | 55 | ரூ.19500-71900/ |
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 29.07.2022
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 24.08.2022
கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் : 06.11.2022
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
(அல்லது)
சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் சான்றிதழ் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு:
நில அளவர்/வரைவாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2022 அன்று, 32 -க்கு கீழ் இருக்க வேண்டும் .
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியின் கீழுள்ள அளவர்/ உதவி வரைவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.07.2022 அன்று, 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணம்: ரூ. 100; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150
ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்க: கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசுப் பணிகளில் நியமன விகிதம் 0.3% மட்டுமே - மத்திய அமைச்சர் ஜிக்கேந்திர சிங்
தேர்வுத் திட்டம்: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இடஒதுக்கீட்டு விதி பின்பற்றப்படும்.அதேபோன்று , 26.12.2017-ன் படி, மாற்றுத் திறனாளிகளுக்கென வகைப்படுத்தப்பட இனங்களுக்கு 4% இடஒதுக்கீடு இத்தேர்வுக்கு பொருந்தும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNPSC