ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

64 காலியிடங்கள் அறிவித்த டிஎன்பிஎஸ்சி.. ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம்!

64 காலியிடங்கள் அறிவித்த டிஎன்பிஎஸ்சி.. ரூ.1 லட்சத்துக்கு மேல் சம்பளம்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

TNPSC Job Recruitment 64 vacancies: விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  TNPSC fisheries Inspecror Recruitment : தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் காலியாக உள்ள 64 மீன்துறை ஆய்வாளர் (INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT)பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

  இந்த பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

  காலியிடங்கள்: 64

  பதவியின் பெயர்காலியிடங்கள் எண்ணிக்கைசம்பளம் ஏற்ற முறை
  மீன்துறை ஆய்வாளர்64ரூ.37,700 –1,19,500/ (நிலை -20 )

  64 மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு முக்கியமான நாட்கள்:

  அறிவிக்கை நாள்: 14.10.2022

  இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 12.11.2022

  கணினி வழித்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:-

  தாள் -1  08.02.2023 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை.(200 வினாக்கள்)

  கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்று :

  மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவல் (பட்டயப்படிப்புத் தரம்) (அல்லது) விலங்கியியல் (முதுநிலை) -

  தாள் -2 -   08.02.2023 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை

  பகுதி -அ: கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்)          பகுதி -ஆ: பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)

  வயதுத் தகுதி : மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

  TNPSC Tamil Nadu Fisheries Subordinate Service

  கல்வித் தகுதி: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.

  தமிழ்நாடு மீன்வளப்  பல்கலைக்கழகம் (அல்லது) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மீன்வள அறிவியல்  பாடநெறியில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்

  (அல்லது)

  விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு அல்லது கடல் வேளாண்மை அல்லது சிறப்பு விலங்கியல் அல்லது கடலோர பொறியியல் அல்லது கடலியல் பாடநெறிகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  (i) Must possess a degree of Bachelor of Fisheries Science awarded by the Tamil Nadu Fisheries University or any other University or Institution recognized by the University Grants Commission;

  (or)

  (ii) Must possess a degree of M.Sc. in Zoology or Marine Biology or Coastal Aquaculture or Mariculture or Special Zoology or Coastal Engineering or Oceanography awarded by any University or Institution recognized by the

  University Grants Commission.

  கட்டணம் :

  பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும்  தேர்வுக் கட்டணம் : ரூ 200/

  64 மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?  இணையவழி விண்ணப்பத்தை 11.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.  விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  Inspector of Fisheries in Tamil Nadu Fisheries Subordinate Service.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job vacancies, Recruitment