ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிஎன்பிஎஸ்சி சுகாதார அலுவலர் பதவி... ரூ.2,09,200 வரை சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்!

டிஎன்பிஎஸ்சி சுகாதார அலுவலர் பதவி... ரூ.2,09,200 வரை சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்!

காட்சிப்படம்

காட்சிப்படம்

இணையவழி விண்ணப்பத்தை 19.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய  சுகாதார அலுவலர் பதவிக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.

  பதவியின் பெயர்: சுகாதார அலுவலர் (Health Inspector)

  காலியிடங்கள்: 12

  சம்பளம்: ரூ.56,900 முதல் ரூ.2,09,200 வரை

  இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 19:11:2022

  கட்டணம் : பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும் தேர்வுக் கட்டணம் : ரூ 200/

  ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பட்டியல் பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

  வயதுத் தகுதி : இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று, 37 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

  கல்வித் தகுதி: 

  எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பித்து தேர்வுக்கு தயாரகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  தெரிவு முறை: 

  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

  தேர்வுத் திட்டம்

  விண்ணப்பிப்பது எப்படி? இணையவழி விண்ணப்பத்தை 19.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் : தமிழக ஊராட்சித் துறையில் வேலை - விண்ணப்பிப்பது எப்படி?

  Published by:Salanraj R
  First published:

  Tags: TNPSC