தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நடத்த முடியாமல் போன குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்- 4 தேர்வுகளை நடத்துவது குறித்து அண்மையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தலைமைச் செயலத்திற்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அறிக்கையாக அனுப்பி உள்ளனர்.
அதில் தமிழ் மொழி பாடத்திற்கு என தனியாக தேர்வு நடத்தி 45 மதிப்பெண்கள் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கலாமா அல்லது ஏற்கெனவே பொது அறிவு தாளுடன் நடத்தப்படும் தமிழ் மொழி தேர்வுகளில் 45 மதிப்பெண்களை தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கலாமா எனவும் கேட்கப்பட்டுள்ளது. இவற்றுக்கான அனுமதிகள் அரசிடமிருந்து கிடைத்தவுடன், அக்டோபர் மாதம் துறைகள் வாரியான தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய முறை அமல்படுத்த திட்டம்
புதிய முறையில் அனைத்து தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்பட்டு. அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு TNPSC பரீசிலித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் 35 க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
கொரோனோ காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திட்டமிட்டப்படி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் சென்ற 22 ந் தேதி தேர்வுகளை நடத்துவது குறித்தும், அரசு எடுத்துள்ள கொள்கை முடிவுகளின் அடிப்படையில் புதிய விதிகளை வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சேர்ந்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
எனவே தமிழக அரசுத் துறை மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும் என நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
புதிய முறையில் அனைத்து தேர்வுகளுக்கு முன்பும் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும். அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றால் மட்டுமே, தேர்வுக்குரிய விடைத்தாள்களை திருத்த பரீசிலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கான நியமனங்களில் 40 இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசின் உத்தரவு பெறப்பட வேண்டும்.
அரசுத்துறைகளில் காலியாக குருப் 1, 2,4 உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருத்துருக்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றுக்கான அனுமதிகள் அரசிடமிருந்து கிடைத்தவுடன், அக்டோபர் மாதம் துறைவாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் பட்டியலுடன், தேர்வு குறித்த அறிவிப்புகள் ம், தேர்வு நடைபெறும் தேதிகளும் வெளியிடப்படும்.
தேர்வாணையத்தின் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பின்னர், 75 நாட்கள் கழித்து எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்குரிய ஒப்புதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கூட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.