ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.1 லட்சம் மேல் மாதச் சம்பளம்.... இந்த டிஎன்பிஎஸ்சி வேலைக்கு இன்றே விண்ணப்பியுங்கள்

ரூ.1 லட்சம் மேல் மாதச் சம்பளம்.... இந்த டிஎன்பிஎஸ்சி வேலைக்கு இன்றே விண்ணப்பியுங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

TNPSC online application: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (அல்லது) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மீன்வள அறிவியல் பாடநெறியில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் காலியாக உள்ள 64 மீன்துறை ஆய்வாளர் (INSPECTOR OF FISHERIES IN FISHERIES DEPARTMENT)பதவிக்கான  விண்ணப்ப செயல்முறை இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

     விண்ணப்பிப்பது எப்படி? இணையவழி விண்ணப்பத்தை 12.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

    கட்டணம் : பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும் தேர்வுக் கட்டணம் : ரூ 200/

    வயதுத் தகுதி : மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2022 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

    கல்வித் தகுதி: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.

    தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (அல்லது) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மீன்வள அறிவியல் பாடநெறியில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்

    (அல்லது)

    விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு அல்லது கடல் வேளாண்மை அல்லது சிறப்பு விலங்கியல் அல்லது கடலோர பொறியியல் அல்லது கடலியல் பாடநெறிகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    (i) Must possess a degree of Bachelor of Fisheries Science awarded by the Tamil Nadu Fisheries University or any other University or Institution recognized by the University Grants Commission;

    (or)

    (ii) Must possess a degree of M.Sc. in Zoology or Marine Biology or Coastal Aquaculture or Mariculture or Special Zoology or Coastal Engineering or Oceanography awarded by any University or Institution recognized by the University Grants Commission.

    எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பித்து தேர்வுக்கு தயாரகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.  அல்லது,  மேற்காணும், கல்வித் தகுதிகள் கொண்ட உங்கள்  நண்பர்களுக்கு இந்த செய்தியை  பகிர்ந்து விடுங்கள்.

    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC