TNPSC: மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு..

TNPSC

கொரோனா வைரஸ்‌ தொற்று காரணமாக தேதி குறிப்பிடாமல்‌ ஒத்தி வைக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பினை TNPSC வெளியிட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணைய அலுவலகத்தில்‌ கடந்த 08.06.2021 முதல்‌ 11.06.2021 வரை நடைபெறவிருந்த மோட்டார்‌ வாகன ஆய்வாளர்‌, நிலை-॥, 2013-2018 பதவிக்கான நேர்முகத்‌ தேர்வானது, கொரோனா வைரஸ்‌ தொற்று காரணமாக தேதி குறிப்பிடாமல்‌ ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்முகத் தேர்வானது 19.07.2021 முதல்‌ 24.07.2021 வரை (21.07.2021 தவிர) தேர்வாணைய அலுவலகத்தில்‌ நடைபெறும்‌ என அறிவிப்பு வெளியாகிவுள்ளது.















    நிறுவனம் TNPSC
    பணியின் பெயர் மோட்டார் வாகன ஆய்வாளர்
    நேர்முக தேர்வு தேதி 19.07.2021 to 24.07.2021

    மேற்கூறிய நேர்முகத்‌ தேர்வில்‌ கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும்‌, நேர்முகத்‌ தேர்வில்‌ கலந்து கொள்ளும்‌ தேதி மற்றும்‌ நேரமானது குறுஞ்செய்தி மற்றும்‌ மின்னஞ்சல்‌ வாயிலாக தெரிவிக்கப்படும்‌ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: