டி.என்.பி.எஸ்.சி. பாஸ் பண்ணினா மட்டும் போதாது.. இந்த விதிகளை பின்பற்ற வேண்டும்!

news18
Updated: August 30, 2018, 11:51 AM IST
டி.என்.பி.எஸ்.சி. பாஸ் பண்ணினா மட்டும் போதாது.. இந்த விதிகளை பின்பற்ற வேண்டும்!
கோப்புப் படம்
news18
Updated: August 30, 2018, 11:51 AM IST
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிக்கை எண் 23/2017 ன் படி தொகுதி 4 ல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை 11.02.2018 அன்று நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை (தரவரிசைப் பட்டியல்) 30.07.2018 அன்று வெளியிட்டது.

சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் 27.08.2018 அன்று தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு விண்ணப்பபடிவத்தில் பதிவு செய்துள்ள கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு இது குறித்து செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள்

1. குறிப்பாணையின் நகலுடன் 30.08.2018 முதல் 18.09.2018 வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2. இச்சேவைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள அரசு இ-சேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

3. பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும்.

4. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்துள்ள விவரங்களுக்கு அதற்குறிய சான்றிதழ்களை கண்டிப்பாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Loading...
5. ஒருவேளை விண்ணப்பத்தில் தவறான தகவல்களை பதிவு செய்து, அதற்கான சான்றிதழ் அவர்களிடம் இல்லை எனில் தங்களிடம் சான்றிதழ் இல்லை என்பதை குறிப்பிட்டு தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு அதனை ஸ்கேன் செய்து உரிய இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6. அரசு இ-சேவை மையங்கள் அரசு விடுமுறை நாட்களில் இயங்காது என்பதாலும் மேலும் இத்தெரிவுக்கென தோரயமாக 33 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இருப்பதாலும், விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

7. பதிவேற்றம் செய்ய வேண்டிய கடைசி நாட்களில் அரசு இ-சேவை மையங்களில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் கூடி அதனால் அவர்கள் பதிவேற்றம் செய்ய இயலாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல.

8. சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள ஏதேனும் சில விவரங்களுக்கு மட்டும் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

9. இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலை பேசியிலும் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 30, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...