பொறியாளர் தேர்வு: சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு!

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியல் தனியே வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

பொறியாளர் தேர்வு: சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 7, 2018, 6:46 PM IST
  • Share this:
ஒருங்கிணைந்த பொறியாளர் தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்ற நிலையை (சர்டிபிகேட் அப்லோடு ஸ்டேட்டஸ்)  அறிந்துகொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஏற்பாடு செய்துள்ளது.

இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 26/2017-ன்படி  ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை 24.02.2018 அன்று நடத்தி அதன் அடிப்படையில் 23.7.2018 அன்று முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 332 விண்ணப்பதாரர்களின் பதிவெண் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

அந்த 332 பேரும் 1.8.2018 முதல் 10.8.2018 வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 292 பேரின் பதிவெண் விவரங்கள் 19/9/2018 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.


இவர்கள் 4-10-2018 முதல் 17-10-2018 வரை இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு முதல் மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்காக சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள / பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று (நவ.7)  முதல் 14.11.2018 வரை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து சான்றிதழ் பதிவேற்ற நிலை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் தேர்வாணையத்தால் பெறப்பட்டதனால் மட்டுமே, அவர்கள் இந்த பதவிக்கு தகுதியானவர்களாக கருதப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியல் தனியே வெளியிடப்படும்.

இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300597 என்ற தொலைபேசி எண்ணில் 8.11.2018 முதல் 14.11.2018 வரை உள்ள வேலை நாட்களில் காலை 10.30 முதல் மாலை 5.45 வரை தொடர்புகொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.Also watch

First published: November 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்