ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

காட்சிப்படம்

காட்சிப்படம்

TNPSC Job alert: ஏற்கனவே, நிரந்தர பதிவு செய்துள்ள ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

TNPSC Notification:  தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதிவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

காலியிடங்கள் விவரம்: 

பதவியின் பெயர்:  நிதியாளர் , அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியில் கல்லூரிகள் (பதவிக் குறியீடு எண் - 3010)

காலிப்பணியிடங்கள்: 5

சம்பளம்:  ரூ.56,100— 2,05,700 வரை

(நிலை-22)

முக்கியாயமான நாட்கள்: 

இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க இறுதி நாள்10.12.2022
இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம்15.12.2022 முதல் 17.12.2022
சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய/மாற்ற/ மீள்பதிவேற்றம் செய்ய இறுதி நாள்26.2.2023
கணினி வழித் தேர்வு நடைபெறும் நாள்10.3.2023
தேர்வு முடிவுமே, 2023
சான்றிதழ் சரிபார்ப்பு/நேர்முகத் தேர்வுஜுன், 2023
கலந்தாய்வுஜுன், 2023

யார் விண்ணப்பிக்கலாம்:  விண்ணப்பதாரர்கள்  பொது நிர்வாகத் துறையில் முதுகலை (M.A.Public Administration) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நிதித் துறையில் சிறப்பு பாடமாகக் கொண்ட வணிக நிர்வாக  படிப்பில் முதுகலைப் பட்டம் (MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

Must have passed Post Graduate Degree in Public

Administration

Or

Post Graduate Degree in Business Administration (MBA)

with Specialization in Finance

இதையும் வாசிக்க: ரூ.34 ஆயிரம் சம்பளத்தில் அரசு மருத்துவமனையில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

வயதுக்கான தகுதி:  இந்த  பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் ஆகிய  பிரிவினருக்கு 37 வயதை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.   ஏனையோர் 1.07.2022 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

இதையும் வாசிக்கTNPSC குரூப் 4 தேர்வு; தோராய கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? - வெளியான அப்டேட்

விண்ணப்பக் கட்டணம்: 

பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும் தேர்வுக் கட்டணம் : ரூ 200/

ஏற்கனவே, நிரந்தர பதிவு செய்துள்ள ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs, TNPSC