சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் (பெண்கள் மட்டும்) காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பதவியின் பெயர்: உதவி இயக்குநர்
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 11
சம்பளம்: ரூ.56100 -205700 (நிலை - 22)
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 16.07.2022
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 16.08.2022
கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் : 05.11.2022
தேர்வுத் திட்டம்: கணினி வழி கொள்குறி வகைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மொத்தம் 510 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம்: ரூ. 200; நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150
ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
கல்வித் தகுதி: மனையியல், உளவியியல், சமூகவியல், குழந்தைவளர்ச்சி, மறுவாழ்வு அறிவியல், சமூகப்பணி ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: CUET UG: தேர்வு மையத்தை அடைய முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு: தேசிய தேர்வு முகமை
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
01.07.2022 அன்றுள்ளபடி, 32 வயது நிறைவடைந்தவர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலிப் பணியிடங்கள்: ரூ.50,000 வரை சம்பளம்
தெளிவுரைவேண்டுவோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம். ஒருமுறை பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
ASSISTANT DIRECTOR [WOMEN CANDIDATE ONLY] DEPARTMENT OF SOCIAL WELFARE AND WOMEN EMPOWERMENT (TAMIL NADU GENERAL SERVICE )உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.