தமிழக சிறைகளில் காலியாக உள்ள 30 உதவி ஜெயிலர் பணியிடங்கள்!

தமிழக சிறைகளில் உதவி ஜெயிலர் ஆண்கள் பிரிவில் 16 இடங்களும், உதவி ஜெயிலர் பெண்கள் பிரிவில் 14 இடங்களும் காலியாக உள்ளன.

news18
Updated: November 1, 2018, 6:33 PM IST
தமிழக சிறைகளில் காலியாக உள்ள 30 உதவி ஜெயிலர் பணியிடங்கள்!
மாதிரிப் படம்
news18
Updated: November 1, 2018, 6:33 PM IST
தமிழக சிறைகளில் காலியாக உள்ள உதவி ஜெயிலர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நிரப்ப உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 7.

எவ்வளவு காலியிடங்கள்: உதவி ஜெயிலர் ஆண்கள் பிரிவில் 16 இடங்களும், உதவி ஜெயிலர் பெண்கள் பிரிவில் 14 இடங்களும் காலியாக உள்ளன.

தேவைப்படும் தகுதிகள்: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆண்கள் 168 செ.மீ. உயரமும், பெண்கள் 159 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: பொதுப் பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் குறைந்தது 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 06.01.2019 அன்று நடைபெறும். தேர்வுக் கட்டணமாக ரூ. 150-ம், பதிவுக் கட்டணமாக ரூ. 150-ம் செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 7.

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_24_nofyn_assistant_Jailor%20pdf.pdf என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

Also watch

First published: November 1, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...