நூலகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது டி.என்.பி.எஸ்.சி!

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

நூலகர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது டி.என்.பி.எஸ்.சி!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: December 10, 2018, 10:46 PM IST
  • Share this:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 29 நூலகர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. நிரப்ப உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி டிசம்பர் 16.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: லைபிரரி சயின்ஸ் பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு, கலை அறிவியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வுக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ. 150-ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டணமான (ஒரு முறை மட்டும் செலுத்துவது) ரூ. 150 தனி. குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 16. எழுத்துத் தேர்வு 23-02-2019 அன்று நடைபெறும். மேலும் விவரங்களுக்கு https://tnpsc.news/wp-content/uploads/2018/04/tnpsc-librarian.pdf என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

Also watch
First published: December 10, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading