டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31!

குரூப் 1 பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு மார்ச் 3-ம் தேதி நடைபெறுகிறது. முதன்மை தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

news18
Updated: January 24, 2019, 8:17 PM IST
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31!
மாதிரிப் படம்
news18
Updated: January 24, 2019, 8:17 PM IST
குரூப் 1 பணியில் காலியாகவுள்ள 139 இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலியிட விவரம்: உதவி கலெக்டர் – 27, டி.எஸ்.பி.- 56, உதவி கமிஷனர் – 11, துணைப் பதிவாளர் (கூட்டுறவுத் துறை) – 13, மாவட்ட பதிவாளர் – 7, உதவி இயக்குநர் (கிராமப்புற வளர்ச்சி) – 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி – 8, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி – 2.

கல்வித் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டப்படிப்பை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-7-2019 நிலவரப்படி 21 வயது பூர்த்தி அடைபவராகவும், 37 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். உதவி கமிஷனர் பணிக்கு மட்டும் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்வுக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ. 450-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். ஒன்டைம் ரிஜஸ்ட்ரேஷன் முறையில் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப பதிவுக் கட்டணமான ரூ. 150-ஐ செலுத்த வேண்டியதில்லை. மேலும் சில பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் வாய்ந்தவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜனவரி 31. மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/Notifications/2019_01_notyfn_Group_I_services.pdf என்ற லிங்க்கை பார்க்கவும்.

இந்தப் பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு மார்ச் 3-ம் தேதி நடைபெறுகிறது. முதன்மை தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
Loading...
Also watch

First published: January 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

But the job is not done yet!
vote for the deserving condidate
this year

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626