தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் பதவிக்கான (Executive Officer, Grade-IV included in Group-VIII Services) ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள்: 36
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 18.06.2022
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 11.09.2022
எழுத்துத் தேர்வு:
தாள் I: கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு., பொது அறிவித் தேர்வு
தாள் II: இந்துமதம், சைவமும், வைணமும்
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தயாரிக்கபபடும் . காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசையின் படி மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
கல்வித் தகுதி: இரண்டாம் நிலைப் பள்ளி இறுதித் தேர்வு (எஸ்எஸ்எல்சி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது 'தமிழ் புலவர்' எனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
01.07.2022 அன்று, விண்ணப்பதாரர் 25க்கு கீழ் இருக்கக் கூடாது. 42 வயது நிறைவடையாமல் இருக்கும் ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 39 வயது நிறைவடையாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 37 வயது நிறைவடையாமல் இருக்கும் ஏணைய பிரிவினர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தோ-திபெத் எல்லை படையில் தலைமைக் காவலர் பணி: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விட கூடுதலாக 10 ஆண்டுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள்
www.tnpsc.gov.in /
www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 650 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
தெளிவுரைவேண்டுவோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம். ஒருமுறை பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.
இந்து சமயத்தை பின்பற்றுவபர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
TNPSC Executive Officerஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.