தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (Vocational Counsellor) மற்றும் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டுப் பணியில் அடங்கிய சமூக அலுவலர் (Community Officer) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவியப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: 16
பதவியின் பெயர் |
பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீடு |
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை |
சம்பளம் |
தொழில் ஆலோசகர் (Vocational Counsellor) மருத்துவக் கல்வித் துறை |
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணி |
5 |
ரூ..36,200-
1,33,100/ |
சமூக அலுவலர்
தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் |
தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டுப் பணி |
11 |
ரூ..35600-
1,30,800/ |
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 28.07.2022
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 26.08.2022
சமூக அலுவலர் பதவிக்கு கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் : 12.11.2022
தொழில் ஆலோசகர் பதவிக்கு கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் : 13.11.2022.
வயது வரம்பு: இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01.07.2022 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
தொழில் ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மருத்துவம் மற்றும் சமூக உளவியல் பாட நெறிகளை சிறப்பு பாடமாகக் கொண்டு சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(Must hold a Post-Graduation in Social Work with Medical and
Psychiatric Social Work as special subject)
சமூக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், அரசு மற்றும் அரசு சாராத துறைகளில் குறைந்தது இரண்டாண்டுகள் சமூக மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
(Master’s Degree in Social Work of a recognized University with
experience in the field of Social Welfare in any department of
Government or in a registered Non-Government Organisation for a
period of not less than two years)
தேர்வுக் கட்டணம்: ரூ. 100;
நிரந்தர பதிவுக் கட்டணம் : ரூ.150
ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பதாரர் நிர்ணயக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்துடன் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவில்லை என்றால், விண்ணப்பம் உரிய நடைமுறைகளுக்குப் பிறகு நிராகரிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்க: TNPSC Recruitment: டிஎன்பிஎஸ்சி 1089 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது
தேர்வுத் திட்டம்: கணினி அடிப்படையில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இடஒதுக்கீட்டு விதி பின்பற்றப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.