முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வு முடிவுகள் வெளியானதாக பரவிய போலி பட்டியல்... தேர்வாணையம் விளக்கம்

டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வு முடிவுகள் வெளியானதாக பரவிய போலி பட்டியல்... தேர்வாணையம் விளக்கம்

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

TNPSC alert : சமூக வலைத்தளங்களில் பரவும் போலி தேர்வு முடிவுகள் பட்டியல் குறித்து டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 02.07.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் குறித்த போலியான பட்டியல் ( fake list) சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதனைத் தேர்வர்கள் கருத்தில் கொள்ள வேண்டாம் என tnpsc  கேட்டுக்கொண்டுள்ளது.

தேர்வாணையத்தின் அனைத்து தேர்வு முடிவுகளும் தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளனர். எனவே, சமூக வலைத்தளத்தில் வரும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். இது போன்று பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Also Read : ரயில்வே ஐடி துறையில் காலியிடங்கள் : தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

மேலும் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, சட்டத்திற்குப் புறம்பாக வேலை வாங்கித்தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதார்கள் மிகவும் கவனமாக இருக்கும் மாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் குறித்து https://www.tnpsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் பார்த்து தெரிந்துகொள்ளவும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Tamil Nadu Government Jobs, TNPSC