Home /News /employment /

IAS, IPS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் - TNPSC அறிவிப்பு

IAS, IPS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் - TNPSC அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

IAS/IPS/IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு, நிர்வாகக் காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டுளளது - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    IAS/IPS/IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு (Half Yearly Examinations and
    Language Tests) நடைபெறும் தேதி மாற்றப்பட்ட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    மாநில அரசு அதிகாரிகள் மற்றும் இந்திய குடிமைப்பணி IAS/IPS/IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த தேர்வு எழுத்துத் தேர்வாகவும், வாய்மொழித் தேர்வாகவும் நடைபெறும். 

    அதன்படி, 2022 அக்டோபர் மாதத்துக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு அக்டோபர் 10, 11, 12, 13, 14, 15 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், நிர்வாக காரணங்களினால் அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு, நிர்வாகக் காரணங்களுக்காக நவம்பர் 01,02,03,04,05 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

    திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணை பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இதையும் வாசிக்க:   சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ரூ.5 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள்

    முன்னதாக, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், " 30.10.2022 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த முதல்நிலைத் தேர்வானது, நிர்வாகக் காரணங்களுக்காக 19.11.2022 அன்று முற்பகல் நடைபெறும்" என்று தெரிவித்தது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி