TNPSC Group 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றம் குறித்து அறிய சிறப்பு ஏற்பாடு

TNPSC Group 4 விண்ணப்பதாரர்கள் 2.11.2018 வரை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அவர்கள் சான்றிதழ் பதிவேற்ற நிலை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

TNPSC Group 4 தேர்வு: சான்றிதழ் பதிவேற்றம் குறித்து அறிய சிறப்பு ஏற்பாடு
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: October 28, 2018, 12:44 PM IST
  • Share this:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய  குரூப் 4 தேர்வில் சான்றிதழ் பதிவேற்றம் செய்தோரின் விவரங்களை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழக அரசின் குரூப் 4-இல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை 11.02.2018 அன்று நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை (தரவரிசைப் பட்டியல்) 30.07.2018 அன்று வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் விவரங்களும் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட 31,425 விண்ணப்பதாரர்கள் 30.08.2018 முதல் 18.09.2018 வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


அவ்வாறு சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள / பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் 2.11.2018 வரை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அவர்கள் சான்றிதழ் பதிவேற்ற நிலை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் தேர்வாணையத்தால் பெறப்பட்டதனால் மட்டுமே அவர்கள் இந்த தேர்வுக்கு தகுதியானவர்களாக கருதப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வுக்கு தகுதியானவர்களின் பட்டியல் தனியே வெளியிடப்படும்.

இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 தொலைபேசி எண்களில் 29.10.2018 முதல் 2.11.2018 வரை உள்ள வேலை நாட்களில் காலை 10:30 முதல் மாலை 5:45 வரை தொடர்புகொள்ளலாம்.Also watch

First published: October 28, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading