Home /News /employment /

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Group 1 Exam: குருப் 1 பணிக்கான முதன்மைத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் TNPSC இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்

    குருப் 1 பணிக்கான முதன்மைத் தேர்வு மார்ச் 4,5,6 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது

    குருப் 1 தேர்விற்கான முதன்மைத் தேர்வுகள் மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குருப் 1 பணிகளுக்கான அறிவிப்பு 2020 ஜனவரி 20 ந் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான முதன்மை தேர்வு மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும்.

    தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Group 1, Group Exams, TNPSC

    அடுத்த செய்தி