ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

குரூப் 2 தேர்வு ஆன்சர் கீ எப்போது.. டிஎன்பிஎஸ்சி தகவல்

குரூப் 2 தேர்வு ஆன்சர் கீ எப்போது.. டிஎன்பிஎஸ்சி தகவல்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

TNPSC: டிஎன்பிஎஸ்சி, குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல.  கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது. ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோல் சர்ச்சைகள் எழுவது இயல்புதான் என்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  குரூப் 2 தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. மேலும், தேர்வுக்கான ஆன்சர் கீ எப்போது வெளியிடப்படும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளது.

  5,529 குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நேற்று முன்தினம் (மே 21) நடைபெற்றது. 11 .78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவு ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், தேர்வில் சில வினாக்கள் பிழையாக கேட்கப்பட்டதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டிஎன்பிஎஸ்சி, குரூப் 2, 2ஏ தேர்வில் கேட்கப்பட்ட எந்த கேள்வியும் தவறானவை அல்ல என தெரிவித்துள்ளது.  கேள்விகள், மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது. ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோல் சர்ச்சைகள் எழுவது இயல்புதான் என்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.

  இதையும் படிக்க: உதவித் தொகையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் : இந்த வாரத்தில் இதற்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்

  மேலும், தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு 4 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தற்காலிக விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வல்லுநர்கள் குழு தேர்வுக்கான விடைகளை இறுதி செய்யும் எனவும் கூறியுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Group 2 exam, TNPSC