Home /News /employment /

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விண்ணப்பம்: இந்த தவறுகளை செய்யாதீர்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விண்ணப்பம்: இந்த தவறுகளை செய்யாதீர்கள்

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

TNPSC Group 2 application: , தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் 5 நாட்களே மீதம் உள்ளன. பெரும்பாலானோர் கடைசி நாளில் விண்ணப்பிக்கலாம்  என்று அஜாக்கிரதையாக உள்ளனர். ஆனால், இது மிகவும் தவறானது. 

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 23ம் தேதியே கடைசித் தேதி ஆகும். அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. மேலும், விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவற்றை திருத்தம் செய்யவும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது இம்மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இந்நிலையில், இதுவரை இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களில் பலர் விண்ணப்பத்தை இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்துவிட்டதாகவும், அந்த தவறுகளை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் டின்பிஎஸ்சியை தொடர்புகொண்டு வருகின்றனர்.  இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    மார்ச் 23ம் தேதிவரை  விண்ணப்பதாரர்களே ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இது தொடர்பான முழு விளக்கங்களை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிக்க: SBI recruitment 2022 : எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி ?


    அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் 5 நாட்களே மீதம் உள்ளன. பெரும்பாலானோர் கடைசி நாளில் விண்ணப்பிக்கலாம்  என்று அஜாக்கிரதையாக உள்ளனர். ஆனால், இது மிகவும் தவறானது.  விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நெருங்க நெருங்க அதிகம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்பதால் சர்வர் டவுன் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதேபோல், கடைசி நேரத்தில் விண்ணப்பிக்கும்போது தவறுகள் செய்தால் திருத்தம் செய்யவும் வாய்ப்பு கிடைக்காது. எனவே, முடிந்தவரை முன்னதாக விண்ணப்பிப்பதே நல்லது.

    மேலும் படிக்க: வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு... ஆக்சிஸ் வங்கி சூப்பர் திட்டம்


    இதேபோல், இந்த முறை புகைப்படங்கள் பதிவேற்றம் செய்வதிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பலர், இதனை அறியாமல் பழைய முறையிலேயே புகைப்படங்களை பதிந்து பிழை செய்கின்றனர்.  தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட அன்றோ அல்லது அதற்கு பிறகோ எடுத்த புகைப்படத்தை மட்டுமே  பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படத்தின் கீழே விண்ணப்பதராரின் பெயர் மற்றும்  புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி ஆகியவை இடம் பெற வேண்டும்.

    மாதிரிப் படம் (நன்றி -டிஎன்பிஎஸ்சி வலைதளம்)


    Selfie, Xerox புகைப்படங்கள், குடும்ப விழாக்கள், சுற்றுலா தலங்களில் எடுக்கப்பட்ட புகைப்படம்,  மரம், செடி, கொடி, கட்டடங்கள் போன்றவை பின்னணியாக கொண்ட புகைப்படங்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அவ்வாறு புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் டின்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரையை முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பது நல்லது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Group 2 exam, TNPSC

    அடுத்த செய்தி