Home /News /employment /

TNPSC Group 2, 2A தேர்வு: 2 நாட்களே உள்ளது.. விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Group 2, 2A தேர்வு: 2 நாட்களே உள்ளது.. விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இம்மாதம் 23ம் தேதி (நாளை மறுநாள்) கடைசி நாள் ஆகும். இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில்,  காலி பணியிடங்கள், பதவிகள், தகுதி,  விண்ணப்பிப்பது எப்படி  என்பதை பார்ப்போம்.

    தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது

    தேர்வு எப்போது:

    குரூப் 2 மற்றும் குரூப் 2 a தேர்வுகள் மே 21-ம் தேதி நடத்தப்படும்.  தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெறும்.

    தகுதி:

    பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    பதவிகள்:

    இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்,  சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்,  சார் பதிவாளர்,  சிறப்பு உதவியாளர், தனி பிரிவு உதவியாளர்,  நகராட்சி ஆணையர்,  உதவிப் பிரிவு அலுவலர்,  முழு நேர விடுதி காப்பாளர்,  முழுநிலை ஆய்வாளர்,  தணிக்கை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கைத்தறி  ஆய்வாளர் போன்ற பதவியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

    இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 விண்ணப்பம்: இந்த தவறுகளை செய்யாதீர்கள்

    கடைசி நாள்:

    குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கியது.  இம்மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது தவறு செய்தவர்கள் தங்களது பிழையை திருத்திக்கொள்ளவும் 23ம் தேதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன.

    எப்படி விண்ணப்பிப்பது



    அறிவிக்கை:



    மார்ச் 14ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதிவரை  விண்ணப்பதாரர்களே ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) மூலம் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். இது தொடர்பான முழு விளக்கங்களை www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Group 2 exam, TNPSC

    அடுத்த செய்தி