Home /News /employment /

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு : ஆகஸ்ட் 22-ம் தேதியே கடைசி நாள் - உடனே விண்ணப்பியுங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு : ஆகஸ்ட் 22-ம் தேதியே கடைசி நாள் - உடனே விண்ணப்பியுங்கள்

குரூப் 1 தேர்வு

குரூப் 1 தேர்வு

TNPSC Group I Examination: குரூப் I தேர்வுக்கு இணையவழி மூலம் நாளை மறுநாள் (22.08.2022) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    TNPSC Group 1 Exam Application: டிஎன்பிஎஸ்சி  வெளியிட்டுள்ள குரூப் 1 போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். எனவே, ஆர்வமுள்ளவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    விண்ணப்பம் செய்வது எப்படி?  

    www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், ஒருமுறைப்பதிவில் தங்களது பதிவு எண்/கடவுச் சொல்லை சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும்.

    விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  (COMBINED CIVIL SERVICES EXAMINATION- I (GROUP- I SERVICES )

    கல்வித் தகுதி குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும். (பள்ளி, மேல்நிலைப் பள்ளி, டிப்ளமோ அல்லது இணையான கல்வி) ஆகியவைகளின் சான்றிதழ் எண், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட தேதி உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    இதையும் வாசிக்க: TNPSC : குரூப் 1 முதல் நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

    மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அரசுப் பணியாளர் போன்ற சிறப்புப் பிரிவு தேர்வர்கள் அதற்கான சான்றிதழ் விவரங்களை அளிக்க வேண்டும். இதில் முக்கியமானது, நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை தமிழ் மொழியில் பயின்று இருந்தால் அதற்கான இடஒதுக்கீடு கோரலாம். மேலும் உடற்தகுதி (உயரம், மார்பின் அளவு) உள்ளிட்ட விவரங்கள் சமர்பிக்க வேண்டும்.

    முதநிலைத் தேர்வுக்கு  இரண்டு விருப்ப மாவட்டங்களில் இருந்து தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். முதன்மைத் தேர்வுக்கு  ஏதேனும் ஒரு மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இறுதியாக, தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.

    இதையும் வாசிக்கTNPSC Group -1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

    விண்ணபப்தாரர் மீது எந்தவித குற்றவியல் வழக்குகளும் பதிவு செய்திருக்கக் கூடாது. விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் தவறாக இருந்தால், தெரிவின் எந்த நிலையிலும் இருந்தும் விண்ணப்பபம் நிராகரிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

    மேலும், இணையவழி மூலம் நாளை மறுநாள் (22.08.2022) மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், பின்னர் அச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Group 1, Group Exams, TNPSC

    அடுத்த செய்தி