ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு: முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு: முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டம் தொடர்பான அறிவிப்புகள் நாளை வெளியாகலாம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டம் தொடர்பான அறிவிப்புகள் நாளை வெளியாகலாம்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டம் தொடர்பான அறிவிப்புகள் நாளை வெளியாகலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.  இதற்கான போட்டித் தேர்வுகள், நேர்காணல் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தி வருகிறது.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு  டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

  இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர்,  செயலாளர், தேர்வுக்கட்டுப்பாட்டாளர் கூட்டாக நாளை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின்போது டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம். ஆண்டுத்திட்டம் அல்லது டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் , தமிழ் மொழிதேர்வை கட்டாயப்படுத்தி தமிழக அரசின் அரசாணை வெளியிட்டது தொடர்பான விளக்கங்கள் குறித்து இந்த சந்திப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Ramprasath H
  First published: