தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர் பதவிகளுக்கான குரூப்-5 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் - 5 ஏ 161 காலிப்பணியிடங்களுக்கு முற்பகல் மற்றும் பிற்பகல் தேர்வுகள் 18.12.2022 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதார்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி:
விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய : https://apply.tnpscexams.in/
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை காண : அறிவிப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Group Exams, TNPSC