Home /News /employment /

TNPSC GROUP 4 தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இன்னும் 2 நாள்தான் உள்ளது…

TNPSC GROUP 4 தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? இன்னும் 2 நாள்தான் உள்ளது…

7 ஆயிரத்திற்கும்  அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

7 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு மார்ச் 29ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி, 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள் தான் உள்ளன. அதனால், தேர்வுக்கு தயாராவோர் விரைந்து விண்ணப்பியுங்கள்

     தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

    குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன.

    இதையும் படிங்க - மத்திய ஆயுதப்படை உதவி கமாண்டன்ட் பதவி: உடனே விண்ணப்பியுங்கள்

    குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    இதையும் படிங்க - BOI வங்கியில் வேலைவாய்ப்பு: 696 காலிப்பணியிடங்கள் - முழு விவரம்

    இந்நிலையில், குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு மார்ச் 29ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதன்படி, 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.28ம் தேதி ஆகும்.

    இதையும் படிங்க - தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: இந்து அறநிலையத்துறையில் வேலை

    இதனிடையே, குரூப்-4 தேர்வுக்கு தற்போது வரை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம்.

    ஒரு முறைப் பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களை helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதர சந்தேகங்களை grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
     ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரர் இணையவழிச் சான்றிதழுக்கு அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். 
    Published by:Musthak
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி