Home /News /employment /

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது... 7,031 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது... 7,031 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி

காட்சிப் படம்

காட்சிப் படம்

7689 வீடியோகிராஃபர்கள், 7689 சிசிடிடி  டெக்னீசியன்கள் மூலம் ஒட்டுமொத்த தேர்வும் ஒளிப்பதிவு செய்யப்பட இருக்கிறது. 

    மாநிலத்தில் மிகப்பெரிய ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நாளை நடத்துகிறது. 7,031 பணியிடங்களுக்கான தேர்வை  22 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் நாளை எழுதவிருக்கின்றனர்.

    மாநிலத்தின் 38 மாவட்டங்கள், 316 தாலுகா மையங்களில் உள்ள 7689 தேர்வு கூடங்களில் 22,02,942 பேர் தேர்வெழுத்த உள்ளனர்.  அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 935354, பெண்கள்  1267457 ஆவர்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணிநிபந்தனைகள்) 2016 சட்டப்பிரிவின் படி, நேரடி நியமனங்களில் பெண்களுக்கென 30% விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. இதில், தகுதி வாய்ந்த ஆதரவற்ற விதவை பெண்களுக்காக 10% ஒதுக்கப்படுகிறது. மேலும், பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கை விண்ணப்பதாரர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கருதப்படுவர். ஆண் -அல்லது - பெண்  என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கை விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவுக்கான 70% இடஒதுக்கீடு பிரிவின் கீழ் கருதப்படுவர்.  அதேபோன்று, மாற்றுத் திறனாளிகளுக்கென வகைப்படுத்தப்பட்ட 4% இடத்துக்கீடு குரூப் 4 பதவிகளுக்கு பொருந்தும். 

    மேலும்,  131 பால் புதுமையினர், 27449 மாற்றுத் திறனாளிகள், 12644 ஆதரவற்ற விதவை பெண்கள், 6635 முன்னாள் இராணுவத்தினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இதையும் வாசிக்க TNPSC Group 4 தேர்வு எழுதுபவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் இதை உடனே செய்யுங்கள்

    தேர்வு ஏற்பாடுகள்: 

    தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளன.  தேர்வு மையத்தினுள் 1,10,150 தேர்வு கண்காணிப்பாளர்களும், தேர்வை மேற்பார்வையிட பல்வேறு துறைகளில் இருந்தும்  7689 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதையும் வாசிக்க  TNPSC Group 4 Exam Centre: சென்னை வேளச்சேரி தேர்வு மையம் மாற்றம்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

    தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, 7689 வீடியோகிராஃபர்கள், 7689 சிசிடிடி  டெக்னீசியன்கள் மூலம் ஒட்டுமொத்த தேர்வும் ஒளிப்பதிவு செய்யப்பட இருக்கிறது.

    கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், காகித துண்டுகள், எலக்ட்ரானிக் பொருட்கள், ஹெட் போன்கள். மற்றும் ப்ளூடூத் கருவிகள், பேனா கேமிராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், சேமிப்பு கருவிகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை, தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  தெரிவித்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி