Home /News /employment /

TNPSC Group 4 தேர்வு மையம் மாற்றம்... டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.. சென்னை தேர்வர்கள் கவனத்திற்கு..

TNPSC Group 4 தேர்வு மையம் மாற்றம்... டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு.. சென்னை தேர்வர்கள் கவனத்திற்கு..

காட்சிப் படம்

காட்சிப் படம்

0117001001  முதல் 0117003300 இடையிலான பதிவெண்கள் கொண்ட தேர்வர்கள் உடனடியாக திருத்தப்பட்ட தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    நிர்வாகக் காரணங்களுக்காக சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. எனவே, தேர்வர்கள் கவனமாக திருத்தப்பட்ட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான அனுமதிச் சீட்டு பதவியேற்றம் செய்யப்பட்டுள்ளது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில்  தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.

    இந்நிலையில், நிர்வாகக் காரணங்களுக்காக சென்னை - வேளச்சேரி தேர்வு மையத்தைத் தேர்வு செய்த தேர்வர்களில் Alv Memorial Public School, Selaiyur, Chennai தேர்வுக் கூடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சில (0117001001  முதல் 0117003300 இடையிலான பதிவெண்கள் கொண்ட ) தேர்வர்களுக்கு மட்டும் Dr. MGR Janaki College of Arts & Science for Women, 11 & 13, Durgabai Deshmuk Road, Chennai-28 (Landmark: Sathyabama MGR Maligai, Sathya Studio / opp to AMS Hospital) எனும் தேர்வுக் கூடத்திற்கு  மாற்றப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

    மேலும், திருத்தப்பட்ட நுழைவு சீட்டு (Revised Hall Ticket) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டி குறுஞ்செய்தி சம்பந்தப்பட்ட தேர்வர்களின் கைபேசிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

    இதையும் வாசிக்க TNPSC Group 4 தேர்வு எழுதுபவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் இதை உடனே செய்யுங்கள்

    அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, 0117001001  முதல் 0117003300 இடையிலான பதிவெண்கள் கொண்ட தேர்வர்கள் உடனடியாக தேர்வாணைய இணையதளத்திற்கு சென்று திருத்தப்பட்ட தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையங்களை மறுஒதுக்கீடு செய்வதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. சக்தி மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பயின்று வந்த 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து நடந்த  போராட்டம் வன்முறையில் முடிந்தது. பள்ளியின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன.

    இதையும் வாசிக்கபொறியியல்,கலை அறிவியல் படிப்புகளுக்கு வரும் 27ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - உயர்கல்வித் துறை

    இதன், காரணமாக தேர்வு மையங்களை மறுஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. அதன்படி, நீலமங்கலம், கள்ளக்குறிச்சி தாலுக்காவில் செயல்படும், AKT Academy Matric Hr. Sec., School, AKT Memorial Vidya Saaket School (CBSE), ஆகிய பள்ளிகளில் தேர்வு மையங்கள் மறுஒதுக்கீடு செய்யப்பட்டன. சக்தி மேல்நிலைப் பள்ளியில் ஒதுக்கப்பட்ட தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மாற்று அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Group 4, TNPSC

    அடுத்த செய்தி