Home /News /employment /

குரூப் 4 தேர்வு: தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்னென்ன? விரிவான விளக்கம்..

குரூப் 4 தேர்வு: தேர்வர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்னென்ன? விரிவான விளக்கம்..

காட்சிப் படம்

காட்சிப் படம்

வினாத்தாள் தொகுப்பு எண் எழுதவுவதற்கு வழங்கப்பட்ட கட்டங்களில் எழுதப்பட வில்லையெனில், பெற்ற மொத்த மதிப்பெண்களில் இருந்து ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது.

    தேர்வு நேரம் மற்றும் காலம்: முற்பகல் 9.30 மணி முதல் 12 மணி வரை

    தேர்வு மையத்தில் இறுதியாக அனுமதிக்கப்படும் நேரம்: 9 மணி . 12.45 முன்னதாக தேர்வர்கள் யாரும் வெளியேறக்கூடாது.

    கருமை நிற மையுடைய பந்துமுனை பேனாவை  (Black- Ball Point pen)மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    முதலில், வினாத்தொகுப்பு எண்ணை சரியாக எழுதி, அதற்குரிய வட்டங்களை நிரப்ப வேண்டும். இந்த எண் முறையற்று நிரப்பப்பட்டிருந்தால், (அல்லது) வினாத்தாள் தொகுப்பு எண் எழுதுவதற்கு வழங்கப்பட்ட கட்டங்களில் எழுதப்படவில்லையெனில், பெற்ற மொத்த மதிப்பெண்களில் இருந்து ஐந்து மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

    Question Booklet Number: மாதிரி விடைத்தாள்


     

    விடைத்தாளில் ஒவ்வொரு கேள்விக்கு விடையளிக்கும் போதும் ஒரே ஒரு சரியான விடையினை மட்டுமே நிரப்ப வேண்டும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு விடைதெரியவில்லை என்றால்(E) என்பதை நிரப்ப வேண்டும்.

    மாதிரி விடைத்தாள்


     

    OMR விடைத்தாளில், எந்தவொரு வினாவிற்கும் அது தொடர்பான எந்த ஒரு வட்டமும் நிரப்பப்படாதிருந்தால் தேர்வரால் பெறப்பட்ட மொத்த மதிப்பெண்களிலிருந்து இரண்டு மதிப்பெண்கள் குறைக்கப்படும்

    எத்தனை As, Bs, Cs, Da மற்றும் Es விடையாகக் குறித்துள்ளீர் எனக் கணக்கிட்டு, மொத்த எண்ணிக்கையினை அதற்குரிய கட்டத்தில் எழுதுவதுடன் அதற்குரிய வட்டங்களையும் நிரப்ப வேண்டும்.

    மாதிரி விடைத்தாள்


    எ.கா. OMR விடைத்தாளில் 36 As விடைகளாக நிரப்பப்பட்டிருந்தால், பிரிவு-II (a) இல் வழங்கப்பட்ட கட்டங்களில் 036 என எழுத வேண்டும் மற்றும் பிரிவு-II (b) இல் அதற்குரிய வட்டங்கள் 0,3 மற்றும் 6 மேலே விளக்கப்பட்டுள்ளபடி நிரப்ப வேண்டும்.

    இதையும் வாசிக்கTNPSC Group 4 தேர்வு எழுதுபவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் இதை உடனே செய்யுங்கள்

    As+Bs+Cs+Ds+Es ஆகியவற்றின் நிரப்பப்பட்ட வட்டங்களின் மொத்த எண்ணிக்கையானது வினாத்தாளில் அச்சிடப்பட்ட மொத்த வினாக்களின் எண்ணிக்கைக்கு சமமானதாக இருக்க வேண்டும். இப்பணிக்காக மட்டும் தேர்வு நேரத்திற்குப் பிறகு 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்படும்.

    இந்த As, Bs, Cs, Da மற்றும் Es பற்றிய குறிப்புகளில் ஏதேனும் வேறுபாடு இருப்பின் நீங்கள் பெறும் மொத்த மதிப்பெண்களிலிருந்து, 02 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.  

    மேலும், அனுமதிச் சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வு மையத்திற்குள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை/பாஸ்போர்ட்/ ஓட்டுநர் உரிமம், நிரந்தரக் கணக்கு அட்டை/வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் ஒலிநகலை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி