தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்பது இளைஞர்களின் பெரும் கனவாக இருந்துவருகிறது. குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.
குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணிகள் இடம்பெறுகின்றன.
குரூப்-4 பிரிவு தேர்வு பலரும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருந்துவருகிறது. இந்தநிலையில், குரூப் 4 தேர்வு தேதி நாளை அறிவிக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. எனவே, குரூப் -4 தேர்வுக்கான கல்வித் தகுதிகள், வயது வரம்பு குறித்து அறிந்துகொள்வது அவசியமாகிறது.
குரூப் 4 பதவிகள்:
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.
கல்வித்தகுதி:
- இந்த தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 10 வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குரூப்-4 தேர்வு தேதி - டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பு
வயது வரம்பு:
பிரிவு |
வயது வரம்பு |
பொதுப் பிரிவினர் |
30 |
இதர பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC) |
32 |
ஆதி திராவிடர் (SC/ST) |
35 |
ஆதரவற்ற விதவைகள் |
35 |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.