Home /News /employment /

TNPSC Current Affairs 11: டிஎன்பிஎஸ்சி தேர்வு ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள் இங்கே

TNPSC Current Affairs 11: டிஎன்பிஎஸ்சி தேர்வு ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள் இங்கே

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 4-வது இந்தியா-அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு: கடந்த ஏப்ரல் மாதத்தில்  நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.    

செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice):  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services), பிரதமரின் ஊட்டச்சத்து திட்டம் (PM POSHAN) மற்றும் இந்திய அரசின் இதர நலத்திட்டங்களின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024-க்குள் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. முன்னதாக, இத்திட்டம் 15 மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒரு மாவட்டம் வீதம் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டது.

இதனால் பெண்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் அதிக பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டம் : 

நாகாலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலங்களில் ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், பதற்றமானவை (Disturbed Areas) என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துளளது.

பதற்றமான பகுதிகள் என்றால் என்ன? 

அமைதியை நிலைநாட்டுவதற்கு இந்திய ராணுவப் படையை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ள பகுதிகளே பதற்றமான பகுதிகள். இச்சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ், நாட்டின் எந்த பகுதியையும் பதற்றமான பகுதிகள் என்று அறிவிக்கலாம்.

3. நான்காவது இந்தியா-அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: 

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 4-வது இந்தியா-அமெரிக்கா 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இரு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

4. ஜோஷ்னா சின்னப்பா:

ஸ்காட்லேண்ட் நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெற்ற WSF உலக இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா தங்கப்பதக்கம் வென்றார்.

TNPSC Current Affairs 10: குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவு தலைப்புகள் இங்கே

5. நீ. சினேகன்:

இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலும், மீண்டும்   தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியில் வரையிலும் 60 கி,மீ தூரத்தை 19 மணி 45 நிமிடங்களில் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை 8ம் வகுப்பு மாணவன் நீ. சினேகன்  படைத்தார்.  
Published by:Salanraj R
First published:

Tags: TNPSC

அடுத்த செய்தி