3,000 பணியிடங்கள் அதிகரிப்பு! டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் உற்சாகம்

3,000 பணியிடங்கள் அதிகரிப்பு! டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் உற்சாகம்
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 25, 2019, 6:17 PM IST
  • Share this:
இந்த ஆண்டு நடத்தப்பட்ட 6,491 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 காலி இடங்களை 6,491-ல் இருந்து கூடுதலாக 3,000 இடங்கள் அதிகரித்து 9,491 இடங்களாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.  இந்த குரூப் 4 பணியிடங்களுக்கானத் தேர்வினை 16,29,865 பேர் எழுதினர்.  7,18,995 பெண்களும், 5,31,410 பெண்கள் உள்ளிட்ட 16 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியியானது. சுமார் 6,500-ஆக இருந்த பணியிடங்களிலிருந்து தற்போது 3,000 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால், தேர்வு எழுதியதில் கூடுதலானவர்கள் பயனடைவார்கள்.


தற்போது காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளதன்படி, தேர்வு எழுதியர்களின் மதிப்பெண் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Also see:

 
First published: November 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading