டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2 பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கப்பட்டது விமர்சனத்திற்குள்ளான நிலையில், மீண்டும் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அரசு பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகள் மூலம் அரசுப் பணிகள் நிரப்பப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கான புதிய பாடத்திட்டம் நேற்று முன் தினம் டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இதனுடன் மாதிரி வினாத்தாளும் வெளியிடப்பட்டது. அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் திருக்குறள் நீக்கப்பட்டு இருந்தது. கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் பாடத்திட்டம் இடம்பெற்றிருந்தது.
புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் நீக்கப்பட்டு இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து,திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கட்டாய தமிழ்.. TNPSC புதிய Syllabus , Model Question Paper வெளியீடு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை கீழ்க்கண்டவாறு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
* கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்(விரிந்துரைக்கும் வகை)
* கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)
* கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)
மேலும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறையில் தலைமை ஆசிரியர், எழுத்தர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இவற்றில் விரிந்துரைக்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித்தேர்வில் ( தொகுதி 11 மற்றும் 11 ஏ உட்பட) திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் எனும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட பாடத்திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Government jobs, Group 2, TNPSC