டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான உத்தேச விடைகளை மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு நாளை 5.45 மணியுடன் முடிவடைகிறது. எனவே, சரியான விடையைக் கோரும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குரூப் 2/2A பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 21ம் தேதி நடத்தியது. 11 ,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் சுமார் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதனடியடுத்து, இந்த எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி தனது இணையத்தளத்தில் பதிவேற்றியது.
உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை 03.06.2022 மாலை 5.45 மணிக்குள் இணைய வழியில் மட்டுமே
www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்கலாம்.
ஆன்லைன் மூலம் மட்டுமே கோரிக்கைகள் பெறப்படும். அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

ஒருவர் எத்தனை கேள்விகளையும் மறுக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இருப்பினும், தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வசதியை கோர முடியும்.
சரியான விடையைக் கோர விரும்பும் விண்ணப்பதாரர், டிஎன்பிஎஸ்சி இணையத்தளத்தில் தனது பதிவெண், விண்ணப்ப எண், பிறந்த தேதி, தேர்வு பாடத்தின் பெயர், வினா எண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.
மேலும், உத்தேச விடைகளை மறுத்து தாங்கள் சுட்டிக் காட்டும் சரியான விடைக்கான/விடைகளுக்கான ஆதாரமாக இருக்கும் புத்தகத்தின் விவரங்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு |
ஜூன் 2022 |
முதன்மை எழுத்துத் தேர்வு |
செப்டமபர் 2022 |
முதன்மை எழுத்துத் தேர்வு முடிவு வெளியீடு |
டிசம்பர் 2022 |
சான்றிதழ் சரிபார்ப்பு |
ஜனவரி 2023 |
நேர்முகத் தேர்வுகலந்தாய்வு |
பிப்ரவரி 2023 |
தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின்னர், தேர்வர்களின் OMR விடைத்தாள் மற்றும் முதன்மைத் தேர்வு விடைத்தாள் ஆகியவை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். உரிய கட்டணம் செலுத்தி தேர்வர்கள் தங்களது விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.