ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TNPSC Group 2 Result | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் - தேர்ச்சி பெற்றவர்கள் முழு பட்டியல் இதோ

TNPSC Group 2 Result | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் - தேர்ச்சி பெற்றவர்கள் முழு பட்டியல் இதோ

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

TNPSC Group 2 Result | டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப் 2, 2ஏ தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. மொத்தம் பல்வேறு துறைகளில் 5413 பதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

  டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு வகைகளில் ஆட்சேர்ப்பு நடக்கிறது. சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் நீதிமன்ற உத்தரவுப்படி புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டி இருந்ததால், முடிவுகள் வெளியாவதில் தாமதமானது.

  இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிப்ரவரி 25ஆம் தேதி பிரதான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  டிஎன்பிஎஸ்சி குரூப்2 தேர்ச்சி பெற்றவர்கள் முழு பட்டியல்

  டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியானது.

  Published by:Vijay R
  First published:

  Tags: TNPSC